வாரணாசி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் சிவலிங்கத்தின் பழமையை அறிய கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற 5 இந்து பெண்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது, அவர்கள் தரப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் - வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப், அங்கு மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று 5 இந்துப் பெண்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.
மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட கள ஆய்வில், அங்குள்ள சுகானாவின் நடுவில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், ஓசுகானாவை சீல் வைக்க வாராணாசி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
» நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
» தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மோப்ப நாய் ‘ஜூம்’ உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி
இந்நிலையில், கடந்த மாதம் இந்துப் பெண்கள் ஐவரும் கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினர். மசூதிக்குள் இந்துக் கடவுளரின் மேலும் பல சிலைகள் இருப்பதாகவும் கூறினார்கள். இந்நிலையில், இந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் தடை செய்துள்ளது. அத்துடன், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago