புதுடெல்லி: நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுதார் ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க கோரி முறையிட்டார்.
இந்த மனுவை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும் என்றும், தற்போதைய சூழலில் இந்த விவகாரத்தில் தலையிட்டால் இந்த தொழிலில் முதலீடு செய்திருப்பவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, தீபாவளி பண்டிகைக்கு பின்னர், மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தனர்.
ஏற்கெனவே, தலைநகர் டெல்லியில் ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்பனை மற்றும் உற்பத்தி செய்யவும் முழு தடை விதித்த டெல்லி அரசின் முடிவிற்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த மனோஜ் திவாரி என்பவர் தொடர்ந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago