புதுடெல்லி: குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதிகளை இன்று (அக்.14) மதியம் 3 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த அறிவிப்பு வெளியாகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இப்போது பாஜக தான் ஆட்சியில் உள்ளது. ஆகையால் ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மியும் கடும் பிரயத்னம் செய்து வருகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி, குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளோ பாஜகவுக்கு சாதகமான சூழலைக் காட்டுகின்றன.
கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன? தேர்தல் தேதி வெளியாகும் முன்னரே இவ்விரு மாநிலங்களிலும் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஏபிபி சி-வோட்டர் சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
182க்கு 135 பெற வாய்ப்பு: குஜராத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக 135 முதல் 143 இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸுக்கு 36 முதல் 44, ஆம்ஆத்மிக்கு 0 முதல் 2, பிற கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 46.8%, காங்கிரஸுக்கு 32.3%, ஆம் ஆத்மிக்கு 17.4% வாக்குகள் கிடைக்கும். இப்போதைய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மியின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளருக்கு 2-ம் இடமும் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு 3-ம் இடமும் கிடைத்துள்ளது.
நெக் டூ நெக் ஃபைட் இருக்கும்: இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 இடங்களில் ஆளும் பாஜகவுக்கு 37 முதல் 45 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 21 முதல் 29 இடங்களும் ஆம் ஆத்மிக்கு 0 முதல் 1 இடமும், பிறகட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைக்கும். பாஜகவுக்கு 45.2% வாக்குகளும், காங்கிரஸுக்கு 33.9% வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 9.5% வாக்குகளும் கிடைக்கும். குஜராத்தைப் போலவே இமாச்சலிலும் இப்போதைய முதல்வர் ஜெய்ராம் தாக்குர் மீண்டும் முதல்வராக அதிகப்படியானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் 2-ம் இடத்திலும், காங்கிரஸின் பிரதிபா சிங் 3-வது இடத்திலும் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago