தெலங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவ் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டின் பின்புறம் சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் 3 பிளாக்குகளுடன் கூடிய புதிய வீடு கட்ட கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ.38 கோடி செலவில் கட்டி முடிக் கப்பட்ட இந்த வீட்டில் இன்று காலை சரியாக 5.22 மணிக்கு குடியேற உள்ளார். இவ்விழாவுக்கு மாநில ஆளுநர் நரசிம்மன், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வளாகத்தில் இவரது மகனும் ஐடி துறை அமைச்சருமான கே.டி.ராமா ராவுக்கும் தனி வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1000 பேர் அமரக்கூடிய அரங்கமும் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர முதல் வர் அலுவலகமும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தப் பகுதியில் சபாநாயகர், அமைச்சர்களுக்கான குடியிருப்புகளும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வருக்கு நக்ஸலைட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதால், 24 மணி நேரமும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த புதிய வீட்டின் குளியலறை, கழிவறை மற்றும் படுக்கையறைகளில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago