காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியும் தீவிரவாதிகளுடன் போராடிய நாய்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ராணுவத்தில் சேவையில் உள்ள நாய் ஒன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களுடன் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் பயிற்சிபெற்ற நாய் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் மிகவும் ஆக்ரோஷமானது, நன்கு பயிற்சிபடுத்தப்பட்டதும் கூட. தீவிரவாதிகளைக் கண்டறிந்து அவர்களை மட்டுப்படுத்த பழக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம் ஜூம் தீவிரவாதிகள் இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. அப்போது அதன் மீது இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இருந்தாலும் தீவிரவாதிகளை கடுமையாக தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்தது. அந்த இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் ஜூம் நாய் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE