அமிர்தசரஸ்: பல மாதங்களாகவே பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் வெடிபொருட் கள், ஆயுதங்கள், வெடி மருந்து கள், போதைப் பொருட்களை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ உளவாளி ஆசிப் டோங்கர் என்பவருக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கராச்சியில் வசித்து வரும் அவர் உளவாளியாக செயல்பட்டு அங்குள்ள ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார். இந்தியாவுக்குள் 40 முறை ட்ரோன்கள் மூலம் எல்லை தாண்டி ஆசிப் டோங்கர் வெடிபொருட் களை அனுப்பி வைத்துள்ளார்.
போதை கடத்தல் வழக்கில் சிக்கி பஞ்சாபின் கோயின்ட்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாஸ்கரன் சிங்கிடம் நடத்திய விசாரணையின் போது இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அவரது கூட்டாளிகள் ரத்தன்பீர் சிங், சுரீந்தர் சிங், ஹெர்சந்த் சிங், குர்சாகிப் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago