புதுடெல்லி: அம்னெஸ்டி இந்தியா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.1.54 கோடியை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அம் னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. இதன் இந்திய பிரிவான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா நிறுவனம் (ஏஐஐபிஎல்), வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறை சட்டத்தை (எப்சிஆர்ஏ) மீறி நிதி பெறுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஏஐஐபிஎல் நிறுவனத்தின் அங்கமான இந்தி யன்ஸ் அம்னெஸ்டி இன்டர் நேஷனல் அறக்கட்டளைக்கு (ஐஏஐடி) சொந்தமான வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.1.54 கோடியை முடக்கி அமலாக்கத் துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.21 கோடியைத் தாண்டி உள்ளது.
அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், “பிரிட்டனின் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம், சேவைகள் ஏற்றுமதி மற்றும் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) என்ற போர்வையில் ஏஐஐபிஎல் நிறுவனத்துக்கு ரூ.51.7 கோடி அனுப்பி உள்ளது. ஆனால், ஆய்வின் போது ஆவணங்களையோ இருதரப்பு ஒப்பந்தத்தையோ அதிகாரிகளிடம் காண்பிக்கவில்லை. எப்சிஆர்ஏ விதிகளில் இருந்து தப்பிக்கவே இதுபோன்ற செயலில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது” என கூறப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago