தவாங்: அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
சீனாவை ஒட்டிய எல்லை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் என்ற பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
காலை சுமார் 10 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிவித்துள்ள ராணுவ அதிகாரிகள், ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். எனினும், பலத்த காயமடைந்த விமானி லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ், சிகிச்சையின்போது உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago