காஷ்மீர் என்கவுன்ட்டர் | சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து காஷ்மீர் கூடுதல் டிஜிபி கூறுகையில், "ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது.

அந்தத் தகவலை அடுத்து சோபியான் மாவட்டத்தின் ட்ராச் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் ஹனான் பின் யாக்கோப், ஜாம்ஷெட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இவர்கள் இருவரும் புல்வாமா காவல் நிலையத்தின் சிறப்பு அதிகாரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாவர். ட்ராச் பகுதியில் நடந்த என்கவுன்ட்டர் இன்னும் தொடர்ந்து வருகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்