உத்தர்காண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர். அந்தப் பேருந்தில் 3 குழந்தைகள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
விபத்து குறித்து காவல்துறை தரப்பில், உத்தர்காண்டின் பவுரி கார்வால் மாவட்டத்தில் கல்யாண கோஷ்டி ஒன்றுடன் சென்ற பேருந்து ரிக்னிகால் பிரோகால் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது 500 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபி அசோக் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் விபத்துப் பகுதியில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புக் குழுவின் 4 கம்பெனிகள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் கிராமவாசிகள் உதவி செய்துள்ளனர் என்றார்.
பயிற்சி மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் அதே நாளில் இந்த விபத்தும் நடந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago