சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்

By செய்திப்பிரிவு

குருகிராம்: சமாஜ்வாதி கட்சியை தொடங்கிய முலாயம் சிங் யாதவ், உ.பி. மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவிவகித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்துள்ளார். கடந்த 2012-ல் உ.பி.யில் சமாஜ்வாதி பெருவாரியான வெற்றி பெற்றபோது மகன் அகிலேஷ் யாதவை, முதல்வராக பதவியில் உட்கார வைத்தார் 82 வயதான முலாயம். கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த முலாயம் 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குருகிராமிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை மோசமானதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்