புதுடெல்லி: தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்ஷான் என்ற பெயரில் விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் தொடர்பான தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தூய்மை நகரங்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
முதல் இடம் பிடித்துள்ள இந்தூருக்கு வெற்றிக்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மத்தியபிரதேச அரசு அதிகாரிகளிடம் வழங்கினார். இந்தூருக்கு அடுத்தபடியாக குஜராத்தின் சூரத் 2-வது இடத்தையும், மகாராஷ்டிராவின் நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் 9-வது இடத்தை டெல்லி (என்டிஎம்சி) பெற்றுள்ளது. கடந்த ஆண்டு டெல்லி 5-வது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago