புதுடெல்லி: நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவியேற்றார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில் நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக தேசிய போர் நினைவிடத்தில் அனில் சவு கான் அஞ்சலி செலுத்தினார். பிறகு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். மூன்று நட்சத்திர லெப்டினன்ட் ஜெனரல் பதவியில் இருந்த அதிகாரி ஒருவர் பணி ஓய்வுக்கு பிறகு 4 நட்சத்திர ஜெனரலாக பதவியேற்பது, சுதந்திரத்திற்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
அனில் சவுகான் 2019 செப்டம்பரில் கிழக்கு மண்டல ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 2021 மே 31-ம் தேதி பணிஓய்வு பெறும் வரை அவர் அப்பதவி வகித்தார்.
» முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு
» சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் முதல் அரசு வேலை - பிஹாரின் ஒரு கிராமமே கொண்டாடும் இளைஞன்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago