காஷ்மீர் பள்ளத்தாக்கில் நாளுக்குநாள் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மேலும் பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு 20 பேர் காயமடைந்தனர்.
பிரிவினைவாதிகள் 120 நாளாக கடையடைப்புக்கு அழைப்பு விடுத்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீவைப்புச் சம்பவங்கள் தொடர்ந்ததில் பஞ்சாயத்து அலுவலக வீடு ஒன்றும் பள்ளிக்கட்டிடம் ஒன்றும் தீக்கிரையாகின.
தேர்வு குறித்த எந்த ஒரு நிச்சயமான தகவல்கள் இல்லாத காலத்தில் பள்ளிகளை விஷமிகள் குறிவைத்து தாக்கி வருவது கவலையளிப்பதாக ஆம்னெஸ்டி, பிரிவினைவாதிகள், முக்கியக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் 12- வகுப்புகளுக்கு இம்மாதமும் மார்ச் மாதமும் தேர்வு நடத்துவதாக மாநில அரசு முடிவு செய்திருந்தது.
மற்றொரு சம்பவத்தில் தீவிரவாதிகள் வைத்த பொறியில் சிக்கிய போலீஸார் 3 பேர் காயமடைந்தனர். நேற்று தத்சர் பகுதியில் தீவிரவாதிகள் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்த ரக்ஷக் என்ற போலீஸ் வாகனம் அந்த இடத்திற்கு வந்தது, அப்போது ஐ.எம்.டி. வெடிகுண்டை இயக்கி வாகனத்துக்கு சேதம் விளைவித்ததோடு 3 போலீசார் காயமடைந்தனர்.
இதற்கிடையே ஸ்ரீநகர் மருத்துவமனையில் உயிரிழந்த 16 வயது குவைசர் சோஃபியின் உடலை சஃபா கதல் பகுதிக்கு இறுதிச் சடங்குக்காகக் கொண்டு வரும்போது ஏற்பட்ட வன்முறையில் 20 பேர் காயமடைந்தனர்.
அக்டோபர் 27-ம் தேதி காணாமல் போன சோஃபி ஷாலிமார் பகுதியில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 16 வயது சோஃபி மரணமடைந்தது அங்கு பதற்றம் ஏற்படுத்தியது. அதாவது போலீஸ் சித்ரவதையில் இவர் மரணமடைந்ததாக அங்கு உள்ளூர் செய்திகள் வெளிவர பதற்றம் கூடியது.
ஆர்பாட்டக்காரர்கள் விடுதலை மற்றும் இந்தியாவுக்கு எதிரான கோஷம் எழுப்ப பாதுகாப்பு படையினர் நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago