தேசிய விளையாட்டு போட்டி - குஜராத்தில் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: 36-வது தேசியவிளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் இன்று தொடங்குகின்றன. வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.

சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு தேசிய விளையாட்டு போட்டி நடைபெறுவதால் இந்தத் தொடர் வீரர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை இன்று மாலை 4.30 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விளையாட்டில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். மொத்தம் 36 விளையாட்டுகளில் போட்டி நடை பெறஉள்ளது. இதில் தடகள போட்டிகள் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 வரை காந்தி நகரில் நடத்தப்பட உள்ளது.

பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த தேசிய விளையாட்டில் ஸ்டீபிள் சேஸ் வீரர்அவினாஷ் சேபிள், நீளம் தாண்டுதல் வீரர்முரளி சங்கர், ஈட்டி எறிதல் வீராங்கனைஅன்னு ராணி, வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, ஓட்டப்பந்தய வீராங்கனைகள் ஹிமா தாஸ், டூட்டி சந்த், அம்லன் போர்கோஹேய்ன், ஜோதி யார்ராஜி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். அதேவேளையில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, காமன்வெல்த் டிரிப்பிள் ஜம்ப்பில் தங்கம் வென்ற எல்தோஸ் பால், பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

2023-ம் ஆண்டு ஹங்கேரிநாட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்துகொள்ள தேசிய விளையாட்டு போட்டியின் உயர்மட்ட செயல்திறன், நேரடி தகுதியாககணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால் இன்று தொடங்கும் தேசிய விளையாட்டு போட்டி தடகள வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்