டெல்லி: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.கே.வேணுகோபாலுக்குப் பிறகு வெங்கடரமணி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்று மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
15-வது தலைமை வழக்கறிஞராக வேணுகோபால் (91) நியமிக்கப்பட்டார். அவர் 3 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்த பிறகு அவ்வப்போது பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. கடைசியாக 3 மாதங்கள் பதவி நீட்டிக்கப்பட்டது. இதன்படி அவரது பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. வயது முதிர்வு காரணமாக, தலைமை வழக்கறிஞராக பதவியில் தொடர அவர் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முகுல் ரோஹத்கி 2-வது முறையாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் தற்போது வெங்கடரமணி நியமிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago