டேராடூன்: உத்தராகண்ட் மாநில பாஜக மூத்த தலைவராக இருப்பவர் வினோத் ஆர்யா. இவர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இதில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரியை (19) கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீஸார், அங்கிதாவை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் விசாரணையின்போது வரவேற்பாளர் அங்கிதாவை, புல்கிட் ஆர்யாதான் கொலை செய்தார் என்று தெரியவந்தது. இதையடுத்து புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிதாவின் உடலையும் போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர். அங்கிதா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியை இடித்து தள்ள மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி விடுதியின் குறிப்பிட்ட பகுதிகளை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர்.
இதனிடையே புல்கிட்டின் தந்தை வினோத் ஆர்யாவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது சொகுசு விடுதியின் சில பகுதிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பாஜக எம்எல்ஏவின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் கைது செய்யப்பட்ட புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யாவை பாஜகவிலிருந்து கட்சி மேலிடம் நேற்று நீக்கியுள்ளது. மேலும், புல்கிட் ஆர்யாவின் சகோதரனான அங்கித் ஆர்யாவையும் கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago