பிஹாரில் ஓராண்டுக்குள் புதிய கட்சி - தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தகவல்

By செய்திப்பிரிவு

நாக்பூர்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விதர்பா தனி மாநில ஆதரவாளர்கள் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

பிஹாரில் லோக் தந்திரிக் தளம் என்ற அரசியல் கட்சியை ஓராண்டுக்குள் தொடங்க உள்ளேன். அதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் 3 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன். ஆறு முதல்வர்களின் தேர்தல் வெற்றிக்கு உதவிய பிறகும் நல்லாட்சி இருப்பதாக என்னால் கூறமுடியவில்லை. அதனால் களத்தை விட்டு வெளியேறினேன். எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் இனி நான் பணியாற்ற மாட்டேன். பிஹாரில், நடைமுறையில் உள்ள அமைப்பு முறையை மாற்றத் திட்டமிடுகிறேன். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்