கமிஷனுக்கு ஆசைப்பட்டு வங்கியில் இருந்து ரூ. 6 லட்சத்தை மாற்றிக் கொடுத்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த காசாளரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகள் முன்பு பொதுமக்கள் கடந்த சில நாட்களாக காத்திருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத், கமலா நகரில் உள்ள சிண்டிகேட் வங்கியில் நேற்று மல்லேஷ் என்ற ஊழியர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, வெளிநபர் ஒருவரிடம் இருந்து ரூ.6 லட்சத்துக்கு புதிய ரூ.2000 நோட்டுகளாக மாற்றிக் கொடுத்துள்ளார். இதற்கு காசாளர் ராதிகா உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு கண்காணிப்பு கேமராவில் பதிவானதைத் தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் இவர்கள் மீது நேற்று போலீஸில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து வங்கி ஊழியர் மல்லேஷ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். ராதிகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரும் இன்று கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago