டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: தமிழகம் உள்பட 45 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், நாடு முழுவதும் தமிழகம் உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மதுபான தொழிலதிபர்கள், விநியோகஸ்தர்கள் இத்தொழிலில் உள்ள சப்ளை செயின் தொடரில் இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்து வருகின்றது.

அண்மையில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தமிழகம் வந்திருந்தார். தமிழகத்தில் அவர் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

இந்த சோதனை டெல்லி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுளது. இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விரைவில் ஊடகங்களைச் சந்தித்து இந்த சோதனை குறித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.

இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது. அதன்பேரில் மணிஷ் சிசோடியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் ஆக. 19-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிசோடியாவின் வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்