சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போலந்தின் மக்டா லினெட் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் போட்டித் தரவரிசையில் 3-வது இடமும், உலகத் தரவரிசையில் 67-வது இடத்தில் உள்ளவருமான போலந்தின் மக்டா லினெட், 142-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஒஸானா செலக்மேதேவாவை எதிர்த்து விளையாடினார்.
ஒரு மணிநேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மக்டா லினெட் 6-2, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 174-ம் நிலை வீராங்கனையான பிரிட்டனின் கேட்டி ஸ்வான், 147-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா கசனோவாவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேட்டி ஸ்வான் 7-6(5), 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago