உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் போது (எஸ்சிஓ) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் இன்று தொடங்கவுள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 8 நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் இந்தமாநாடுகள் நடைபெற்றன. இதனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில் இந்தியா, ரஷ்யா ஆகிய 2 நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்பாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்துப் பேசவுள்ளனர் என்று ரஷ்ய அதிபர்மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

மாநாட்டின் போது இருவரும் 2 நாடுகளிடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது, நல்லுறவை மேம்படுத்து வது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை அதிகாரி யூரி உஷாகோவ் அளித்த பேட்டியில் கூறும்போது, “இரு நாட்டு தலைவர்களும் 2 நாடுகளிடையிலான உறவுகளை மேம்படுத்துதல், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வரும் டிசம்பரில் இந்தியா தலைமையேற்கவுள்ளது. மேலும் 2023-ல்ஜி20 மாநாட்டுக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கும் இந்தியா தலைமை வகிக்கவுள்ளது. எனவே 2 நாட்டுத் தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது" என்றார்.

அதே நேரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தும் திட்டம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

53 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்