புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்றது. அப்போது மத்திய அரசின் 14-வது தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோஹத்கி (67) நியமிக்கப்பட்டார். அவர் 2017 வரை பதவியில் நீடித்தார்.
இதைத் தொடர்ந்து 15-வது தலைமை வழக்கறிஞராக வேணுகோபால் (91) நியமிக்கப்பட்டார். அவர் 3 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்த பிறகு அவ்வப்போது பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. கடைசியாக 3 மாதங்கள் பதவி நீட்டிக்கப்பட்டது. இதன்படி அவரது பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தலைமை வழக்கறிஞராக பதவியில் தொடர அவர் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முகுல் ரோஹத்கி 2-வது முறையாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago