ரயில்வே சங்க தேர்தலில் 61-வது முறை வெற்றி பெற்று 106 வயது கண்ணையா சாதனை

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் கண்ணையா லால் குப்தா, ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அவர், பின்னர் வடக்கு ரயில்வே பணியில் சேர்ந்தார். கடந்த 1946-ம் ஆண்டில் வடக்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க பொதுச் செயலாளராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 1974-ம் ஆண்டில் ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தில் பங்கேற்றார். அதேநேரம் மஸ்தூர் யூனியன் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தினார். கடந்த 1981-ம் ஆண்டில் ரயில்வே பணியில் இருந்து கண்ணையா ஓய்வு பெற்றார். எனினும் மஸ்தூர் யூனியனை விட்டு அவர் விலகவில்லை. தற்போது அவருக்கு 106 வயதாகிறது.

அண்மையில் நடைபெற்ற வடகிழக்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க தேர்தலில் கண்ணையா லால் குப்தா 61-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்