கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காக்கநாடு வழியாக ஜேஎல்என் மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, காக்கநாடு வழியாக ஜேஎல்என் மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 11 நிலையங்கள் வழியாக 11.17 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.1,957.05 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அலுவா முதல் பேட்டா வரை 22 நிலையங்களில் 25.6 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.5,181.79 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

கொச்சி மெட்ரோ முதல் கட்ட ‘பி’ திட்டத்தின் கீழ் எஸ்என் நிலையம் முதல் திரிபுனித்துரா முனையம் வரை 1.20 கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE