கர்நாடகாவின் இளம் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து சாதி மடமான இதன் மடாதிபதியாக‌ பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்