மும்பை: 9 நிமிடங்களில் 20 கிலோ மீட்டரைக் கடக்கும் அளவிற்கு அதிவேகமாக சென்ற காரில் சைரஸ் மிஸ்ட்ரி சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாலேயே அவர் உயிரிழக்க நேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி நேற்று (செப்.4) கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி மெர்சிடஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் எதிர்பாராமல் மும்பைக்கு அருகே பல்கர் என்னும் இடத்தில் உள்ள சூரியா நதியில் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்ட்ரி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்த போலீஸார் பால்கர் பகுதியில் உள்ள சரோட்டி சோதனைச் சாவடியை 2.21 மணிக்கு கார் கடந்துள்ளது. விபத்து நடந்த பகுதி அங்கிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. விபத்து நடந்த நேரம் சரியாக 2.30 மணி. செக் போஸ்டில் இருந்து கிளம்பிய கார் 9வது நிமிடத்தில் விபத்து நடந்துள்ளது. 20 கி.மீ தூரத்தை கார் வெறும் 9 நிமிடங்களில் கடந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையில் தெரிய்வந்த விவரம்:
» டாடா சன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் மரணம்
» தேசிய அரசியலுக்கு வருகிறார் நிதிஷ் குமார் - எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க டெல்லியில் 3 நாள் முகாம்
1. சைரஸ் மிஸ்ட்ரி விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவருடன் வந்த ஜஹாங்கிர் தின்ஷா பண்டோல் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது உயிரிழந்தார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2. சைர்ஸ் மிஸ்ட்ரிக்கு தலைக்காயம் ஏற்பட்டுள்ளது. ஜஹாங்கிர் தின்ஷாவுக்கு இடது காலில் எலும்பு முறிவும், தலைக்காயமும் ஏற்பட்டது.
3. சைரஸ், ஜஹாங்கிர் இருவருமே பின் இருக்கையில் தான் அமர்ந்திருந்தனர். பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது மோட்டார் வாகன சட்டப்படி அவசியம்.
4. அனாஹிதா பண்டோல், காரை ஓட்டிவந்தார். அவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜஹாங்கிரின் சகோதரி, மருத்துவரும் கூட.
5. விபத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள், கார் இடது புறத்திலிருந்து இன்னொரு வாகனத்தை ஓவர் டேக் செய்ய முயன்றது ஆனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது.
6. விபத்தில் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த அனாஹிதா, அவரது கணவர் டாரியஸுக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளன.
7. முன்னிருக்கையில் இருந்தவர்களை ஏர்பேக் காப்பற்றியுள்ளது.
இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago