பிரதமர் மோடி நாளை கேரளா வருகை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி / பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1, 2் தேதிகளில் கேரளா, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி செப். 1-ம் தேதி மாலை 6 மணிக்கு கேரள மாநிலம் காலடி கிராமத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் பிறப்பிடமான ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க் ஷேத்திரத்துக்கு செல்கிறார். செப்டம்பர் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில், நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கிய பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என கருதப் படுகிறது.

இந்த புதிய கப்பல் இயக்கப்படுவதன் மூலம் இந்தியாவில் 2 செயல்பாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இருக்கும்.

இந்த நிகழ்வில் இந்திய கடல்சார் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான புதிய கடற்படைக் கொடியை அறிமுகம் செய்கிறார். அதன்பிறகு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு சென்று அங்கு ரூ.3,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE