கிணற்றில் குதித்து இறப்பேனே தவிர காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது: நிதின் கட்கரிநான் பாஜகவில் மாணவரணி தலைவராக இருந்தபோது காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீகாந்த் என்னிடம் காங்கிரஸ் கட்சியில் சேரும்படி
சொன்னார். நான் நல்லவன் என்றும், தவறான கட்சியில் இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். அவர் என் நெருங்கிய நண்பர் ஆவார். ஆனால் நான் அவரிடம், கிணற்றில் விழுந்து இறந்தாலும் இறப்பேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் மட்டும் சேரமாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு காங்கிரஸ் கொள்கை பிடிக்காது என்று சொன்னேன். தொழில்செய்யும் போது ஒவ்வொருவரும் நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனிடையே, அமைச்சர் நிதின் கட்கரிக்கும் பாஜக தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதின் கட்கரி அரசியலில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார். மற்றொரு நிகழ்ச்சியில் நன்கொடையாளர்கள் கூறுவதை அரசியல் கட்சிகள் கேட்கின்றன என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதனால் சமீபத்தில் பாஜகவின் உயர்மட்டக் குழுவில் இருந்து நிதின் கட்கரி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE