அக்.17ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர் தேர்தலை அக்டோபர் 17ஆம் தேதி நடத்துவது என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை செப்டம்பர் 22ல் வெளியாகும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24ல் தொடங்கும். செப்டம்பர் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளகும். காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத், எம்.ஏ.கான் போன்ற மூத்த தலைவர்கள் விலகிய நிலையில், ராகுல் காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இந்த காரிய கமிட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE