பூகம்பத்தில் இறந்தவர்களின் நினைவாக அருங்காட்சியகம் - நாளை அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குஜராத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக கட்டிய ஸ்மிருதிவன் நினைவு கட்டிடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு நாளை அர்ப்பணிக்க உள்ளார்.

குஜராத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அருங்காட்சியம் ஒன்று கட்டும் திட்டத்தை குஜராத் முதல்வராக பதவி வகித்த போது மோடிஅறிவித்தார். இந்த நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்ததையடுத்து தற்போது அந்த அருங்காட்சியகம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் நாளை அர்ப்பணிக்கவுள்ளார்.

கட்ச் வளைகுடாவின் புஜ்நகரில் 470 ஏக்கர் பரப்பளவில் ஸ்மிருதிவன் நினைவு அருங்காட் சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 11,500 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சிய சுவர்கள் மற்றும் அவற்றின் தளங்கள் கட்ச் பகுதியில் உள்ள கற்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்