குஜராத் கடல் பகுதியில் கடலோரக் காவல்படையினர் பாகிஸ்தான் படகு ஒன்றை 9 பேர்களுடன் சிறைபிடித்துள்ளது.
இன்று காலை 10.15 மணியளவில் குஜராத் மாநில அரபிக்கடலில் இந்திய கடலோரக் காவற்படையினருக்குச் சொந்தமான சமுத்ர பவக் என்ற கப்பல் இந்தியப் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு ஒன்றை 9 பேர்களுடன் சிறைபிடித்தது.
படகுடன் 9 பேர்களையும் கடலோரக் காவற்படையினர் போர்பந்தருக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் படி படகில் இருந்தவர்கள் மீனவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து பாதுகாப்புப் படை பி.ஆர்.ஓ. விங் கமாண்டர் அபிஷேக் மதிமன் கூறும்போது, “முதற்கட்ட விசாரணையில் இவர்கள் பாகிஸ்தான் மீனவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஆனால் இவர்களை மேலும் விசாரிக்க போர்பந்தர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்” என்றார்.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு குஜராத் அரபிக் கடல் பகுதியில் பாதுகாப்புக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலோரப் பாதுகாப்புப் படையினர் கப்பகல்கள் மற்றும் விமானங்கள் மூலம் கடல் எல்லைப்பகுதியை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் படகு 9 பேர்களுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago