திருப்பதி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று மாலை கோயில் கொடிமரத்தில் கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்குகிறார்.

இரவு பெரிய சேஷ வாகனத் தில் தேவி, பூதேவியுடன் எழுந்தருளும் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதைத் தொடர்ந்து வரும் 11-ம் தேதி வரை காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமியின் திருவீதி உலா நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 7-ம் தேதியும், தங்கத் தேர் பவனி 8-ம் தேதியும், தேரோட்டம் 10-ம் தேதியும் நடைபெறுகிறது. 11-ம் தேதி காலை சக்கர ஸ்நானம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி நகரம் முழுவதும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்கள், கட்டிடங்கள் மற்றும் அலிபிரி சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் திருமலையிலும் வண்ண மலர் களாலும், வண்ண விளக்குகளா லும் கண்கவர் அலங்காரம் செய்யப் பட்டுள்ளது.

தொங்கும் தோட்டம்

தவிர தோட்டக்கலை துறை சார்பில் திருமலையில் 7 இடங் களில் தொங்கும் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குவதையொட்டி, திருமலையில் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்ட தொங்கும் தோட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்