ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லை தாண்டி நுழைய முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்திலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அருகே புகார்னி கிராமம் உள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியிலும் கண்காணிப்பு பணியிலும் இருந்தனர்.
அப்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள வேலியைத் தாண்டி அவர்கள் நுழைய முயன்றபோது ராணுவத்தினர் சுட்டனர் என்று ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
» திருப்பதி உண்டியல் காணிக்கை 22 நாட்களில் ரூ.100 கோடி தாண்டியது
» மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர், மனைவியை மாண்டோலி சிறைக்கு மாற்ற உத்தரவு
இதில் ஒரு தீவிரவாதி ராணுவம் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி இறந்ததாகவும், சத்தம் கேட்டு ஓடிவந்த ராணுவத்தினர் சுட்டதில் மற்றொரு தீவிரவாதி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவர்களது உடல்கள் இருநாடுகளுக்கு இடையிலான வேலிப் பகுதி அருகே இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago