அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தக் கூடாது - பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி ஆயுர்வேத் என்ற நுகர்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆயுர்வேத மருத்துவ முறையை ஊக்குவிக்கும் அவர், நவீன மருத்துவ முறை மற்றும் அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். அத்துடன் அவருடைய நிறுவன விளம்பரங்களிலும் இதுபோன்ற கருத்துகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கரோனா தடுப்பூசி குறித்தும் ராம்தேவ் விமர்சனம் செய்துள்ளார். இதை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ரமணா கூறும்போது, “யோக கலையை பிரபலமாக்கி வரும் பாபா ராம்தேவை மதிக்கிறோம். ஆனால் அவர் மற்ற மருத்துவ முறைகளை குறை கூறுவது ஏன்?

நவீன மருத்துவ முறை மற்றும் அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் பாபா ராம்தேவ் கருத்து தெரிவிக்கக் கூடாது.

இந்த ஐஎம்ஏ மனு குறித்து மத்திய அரசு, இந்திய விளம்பர தர கவுன்சில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் ஆகியவை பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 secs ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்