தீபாவளி போனஸாக 1,260 கார்கள், 400 வீடுகள்: ஊழியர்களை வியக்கவைத்த வைர வியாபாரி

By கார்டியன்

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக 1,260 கார்களையும், 400 வீடுகளையும், நகைகளையும் வழங்கியுள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சாவ்ஜிபாய் தொலாகியா வைரங்களை ஏற்றுமதி செய்து வருகிறார்.

இவர் தனது நிறுவனம் நிர்ணயித்த இலக்கை அடைந்ததால், தனது ஊழியர்களுக்கு 1,260 கார்கள், 400 வீடுகள், நகைகள் ஆகியவற்றை தீபாவளி பரிசாக அளித்திருக்கிறார்.

இது குறித்து சாவ்ஜிபாய் தொலாகியா கூறும்போது, "எங்களுடைய இலக்கு என்பது எங்கள் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரிடமும் வீடும், காரும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதினோம். அதற்காகவே இந்தப் பரிசுகளை எங்கள் ஊழியர்களுக்கு வழங்கினோம்" என்றார்.

முன்னதாக 2012, 2014ஆம் ஆண்டுகளிலும் சாவ்ஜிபாய் தொலாகியா இதே போன்ற விலை உயர்ந்த பரிசுகளை தனது ஊழியர்களுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்