ஆம் ஆத்மியைக் கண்டித்து கேஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

டெல்லியை சாராயத்தில் மூழ்கடிக்க சாராய மாஃபியாக்களுடன் கைகோத்து கோடிக் கணக்கில் ஊழலில் ஈடுபட்டதற்காக மணிஷ் சிசோடியா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்களை பாஜகவினர் எழுப்பினர்.

முன்னதாக நேற்று கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "சாமானிய மனிதர்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மத்திய அரசோ மாநில அரசுகளுடன் கைகோத்து இப்பிரச்சினைகளுக்கு அல்லவா தீர்வு காரண வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு மோதல் போக்கினைக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு சோதனை என்ற விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறது. இப்படியே சென்றால் தேசம் எப்படி வளர்ச்சி காணும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் பாஜகவினர் அவர் வீட்டின் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதேபோல், காங்கிரஸ் கட்சியினர் மணிஷ் சிசோடியாவின் தொகுதிக்கு உட்பட்ட பிரதாப்கஞ்ச் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிஷ் சிசோடியாவின் படங்களின் மீது மை பூசி அவர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மணிஷ் மீது வழக்கு: ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தலைமைச் செயலர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன் பேரில், மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்