குவாஹாட்டி: மிசோரம் மாநில முதல்வராக மிசோ தேசிய முன்னணி தலைவர் ஜோரம்தங்கா உள்ளார். இவரது மகள் மிலாரி சாங்தே, கடந்த 17-ம் தேதி தலைநகர் அய்வாலில் உள்ள தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற சென்றார்.
ஆனால், முன்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி மிலாரியை பார்க்க மறுத்துள்ளார் மருத்துவர். இதனால் ஆத்திரமடைந்த மிலாரி, மருத்துவரின் அறைக்குள் நுழைந்து அவரது கன்னத்தில் அறைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து அனுப்பினர்.
இந்த சம்பவத்தை செல் போனில் பதிவு செய்த யாரோ, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அது வேகமாக பரவி உள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் முதல்வரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்திய மருத்துவ சங்கத்தின் மிசோரம் பிரிவினர், இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று முன்தினம் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, முதல்வர் ஜோரம்தங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தனது மகள் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளின் செயலை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago