புதுடெல்லி: இமாச்சல் காங்கிரஸ் வழிகாட்டு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தேர்தலை முன்னிட்டு கட்சி எடுத்த முடிவுகள் குறித்து என்னுடன் ஆலோசிக்கவில்லை. எனது சுயகவுரவத்தை விட்டு கொடுக்க முடியாது. ஆனால் இமாச்சலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்வேன் என ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
இமாச்சல் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தலைவராக ஆனந்த் சர்மா கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் சிறக்க கட்சியின் அனைத்து பதவிகளிலும் முழு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று காங்கிரஸின் அதிருப்தி தலைவர்கள் 23 பேர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சிலநாட்களுக்கு முன், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பிரசார குழு, அரசியல் விவகார குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது சர்மாவும் ராஜினாமா செய்தது காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago