கூடுதல் வழக்குகளில் சிக்க வைக்கக் கூடாது என்று அனைத்து மாநில டிஜிபி-க்களுக்கும் உத்தர விடக் கோரி, பப்லு ஸ்ரீவத்சவா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை நகரில் பிரபல தாதா வாக இருந்தவர் தாவூத் இப்ராஹி மின் கூட்டாளி பப்லு ஸ்ரீவத்சவா. கடந்த 93-ம் ஆண்டு, தாவூத் இப்ராஹிமின் ஆயுதங்கள் மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய போது, அதை பறிமுதல் செய்த உதவி சுங்க அதிகாரி அரோராவை கொலை செய்த வழக்கில் ஸ்ரீவத்சவா முக்கிய குற்றவாளி யாக சேர்க்கப்பட்டார்.
தலைமறைவாக இருந்த ஸ்ரீவத்சவாவை பிடிக்க இன்டர் போல் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இன்டர்போல் போலீஸார் 95-ம் ஆண்டு அவரை சிங்கப்பூரில் கைது செய்தனர். அவர் இந்தியா கொண்டுவரப்பட்டு, சுங்க அதிகாரி கொலை வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 95-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். அவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் பெரைலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பப்லு ஸ்ரீவத்சவா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது, விடுக்கப்பட்ட நோட்டீசில் நான்கு வழக்குகளில் மட்டுமே எனக்கு தொடர்பு இருப்ப தாகக் கூறப்பட்டது. ஆனால், கூடுதல் வழக்குகளை என் மீது தொடர்ந்து வருகின்றனர். இது நாடு கடத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பானது.
எனவே, நோட்டீசில் குறிப்பிடப் பட்டுள்ள வழக்குகளைத் தவிர, கூடுதல் வழக்குகளில் சிக்க வைக்கக் கூடாது என்று அனைத்து மாநில டிஜிபி-க்களுக்கும் அறி வுறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘நாடு கடத்தலுக்கு ஒப்புக் கொண்டு தான் வழக்கு விசாரணையை சந்திக்கிறீர்கள். நீங்கள் குற்றம் செய்திருந்தால், அதற்கான விசாரணையை சந்தித்து தான் ஆக வேண்டும்’’ என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago