உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்

By செய்திப்பிரிவு

உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2வது இடத்தில் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள், உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை விட மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கின்றனர்

காற்றில் இருக்கக்கூடிய பார்ட்டிகுலேட் மேட்டர் (Particulate matter), அதாவது தூசின் அளவு 2.5 விட்டமாக இருக்கிறது. சுவாசிக்கக்கூடிய அளவுள்ள துகள்கள் 10 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எனவே, அதை பி.எம். 10 என்கிறார்கள் (PM 10). இது ஒரு கியூபிக் மீட்டருக்கு 20 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பது உலகச் சுகாதார அமைப்பு விதி.

ஆனால், சமீபகாலமாக 2.5 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்கும் சுவாசிக்கக்கூடிய அளவுடைய துகள்கள் பற்றி ஆய்வுகள் நடத்தப் பட்டுவருகின்றன. இந்த அளவை பி.எம். 2.5 (PM 2.5) என்கிறார்கள்.

காற்று மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்களாக வாகன உமிழ்வுகள், நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், சமையலுக்கு மற்றும் கட்டுமானத் துறைக்கான உயிரி எரிப்பு ஆகியவை உள்ளன.

இந்நிலையில், சராசரி மக்கள் தொகையுடன் மாசின் அளவை ஒப்பிட்டு இந்த கணக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி PM 2.5 மாசுபடுத்தலில், டெல்லியின் நிலவரம் ஒரு கன மீட்டருக்கு 110 மைக்ரோகிராம் என்ற உச்சபட்ச நிலையை எட்டியுள்ளது.

இந்த பட்டியலுக்காக உலகம் முழுவதும் 7000 நகரங்களின் காற்று மாசு அளவு திரட்டப்பட்டன. இருப்பினும் உலகின் 6 பிராந்தியங்களில் 103 நகரங்களின் தரவுகள் பரிசீலிக்கப்பட்டன.

இந்தப் பட்டியலின்படி டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா இரண்டாம் இடம். நைஜீரியாவின் கனோ நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளாது. டாப் 20 பட்டியலில் கொல்கத்தா 14ஆம் இடத்தில் உள்ளது.

நைட்ரஜன் டை ஆக்ஸைடு வெளியீட்டு அளவைப் பொறுத்தவரை உலகிலேயே சீனாவின் ஷாங்காய் நகரில் தான் அதிகமாக உள்ளது. ஷாங்காயில் ஒரு க்யூபிக் மீட்டர் அளவில் 41.6 மைக்ரோகிராம் நைட்ரஜன் டை ஆக்ஸைடு வெளியீடு உள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்ட ஹெச்இஐ அமைப்பின் மூத்த விஞ்ஞானி பல்லவி பன்ட் கூறுகையில், உலகில் நகரமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்களின் உடல் உபாதைகளும் அதிகரிக்கின்றது. உலக நாடுகள் ஆரம்ப நிலையிலேயே தலையிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றார்.

எந்தவொரு பெரிய நகரமும் அல்லது நாடும் தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான காற்றை வழங்குவதில்லை என்று அண்மையில் உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்