டெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் இருந்து வரும் நேற்று இரவு டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 14வது குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்கவுள்ளார்.
» ரஷ்ய எண்ணெய் இறக்குமதி | 'பெஸ்ட் டீலை பெறுவது என் தார்மீகக் கடமை' - அமைச்சர் ஜெய்சங்கர்
» ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை
அதன்பின்னர், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, அண்மையில் நடைபெற்று முடிந்த 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்ததற்கும், இந்த போட்டிகளின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்காகவும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார்.
முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமரை அழைக்க டெல்லி செல்லவிருந்த நிலையில் தமிழக முதல்வர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
எனவே அவரால் பிரதமரை விழாவுக்கு நேரில் சென்று அழைக்கமுடியவில்லை. இந்நிலையில், நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் டெல்லி செல்ல இருப்பதாகவும், இந்த சந்திப்பின்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவையும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago