ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜாமியா மாணவருக்கு 30 நாள் நீதிமன்ற காவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் மொஹ்சின் அகமதுவை 30 நாள் நீதிமன்ற காவலில் வைக்க என்ஐஏ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படித்து வந்தவர் மொஹ்சின் அகமது (22). பிஹார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த இவர், டெல்லி பட்லா ஹவுஸ் பகுதியில் தங்கியிருந்தார். பட்லா ஹவுசில் கடந்த 6-ம் தேதி என்ஐஏ நடத்திய சோதனையை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார்.

மொஹ்சின் அகமது, ஐஎஸ்ஐஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர் எனவும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அனுதாபிகளிடம் இருந்து அந்த அமைப்புக்கு இவர் நிதி திரட்டியதாகவும் என்ஐஏ தெரிவித்தது. இந்நிலையில் அவரது என்ஐஏ காவல் முடிவுக்கு வந்ததால் நேற்று டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 30 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்