சுதந்திர தினத்தை ஒட்டி சாதனை: உயர் நீதிமன்றங்களில் 37 புதிய நீதிபதிகள் நியமனம்

By செய்திப்பிரிவு

சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் மொத்தம் 138 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளியன்று பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு 26 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றங்களுக்கு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதையும் சேர்த்து, இதுவரை நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் மொத்தம் 138 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றங்களில் 126 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதே அதிகளவாக இருந்த நிலையில், தற்போது, அந்த எண்ணிக்கையைக் கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றங்களில் 126 நீதிபதிகளும், உச்ச நீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் நீதித்துறை நியமன நடைமுறைகள், விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE