இந்தியா @ 75 - நகர்புற வளர்ச்சி: ஸ்மாட்டி சிட்டிகளும் மெட்ரோ ரயில்களும்

By கண்ணன் ஜீவானந்தம்

இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது நாட்டில் பெரும்பாலான பகுதிகள் கிராமங்கள்தான். கிராமங்களின் நாடாகதான் இந்தியா இருந்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சென்னைதான்.

இந்த 75 ஆண்டுகளில் சென்னை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சென்னையின் அடையாளமாக தற்போது இருப்பது ஆங்கிலேயர் கால கட்டிடங்கள்தான். அந்த அளவுக்கு இந்தியாவின் நகர்புறங்களில் இந்த 75 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து உள்ளன.

ஆங்கிலேயர் கால கட்டிடங்களுக்கு சவால் விடும் வகையில் சென்னையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் வானுயரத்தின் அளவு பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதற்கு முக்கியக் காரணம் நகர்புற வளர்ச்சியில் இந்தியா செலுத்திய தனி கவனம்தான்.

நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படும் நேரு தொடங்கி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை அனைவரும் இந்தியாவின் நகர்புற வளர்ச்சியில் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.

இதில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம், ராஜீவ் ஆவாஸ் யோஜனா, ஸ்மார்ட் சிட்டி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் தற்போது அதிக அளவு பேசப்பட்டு வரும் ஸ்மாட் சிட்டி மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களால் இந்தியாவின் நகர்புறங்களில் பல மாறங்கள் நிகழ்ந்து என்று கூறினால் அது மிகையாகாது.

இந்தியாவில் ஸ்மார் சிட்டி திட்டம் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி தொடங்கப்பட்டபோது, இந்தியாவில் 100 நகரங்களைத் தேர்வு செய்து அந்த நகரங்களை நவீன ஸ்மார்ட் நகரங்களாக மாற்றுவதுதான் இதன் இலக்காக இருந்தது. 5 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய ஆண்டுக்கு ரூ.100 கோடி என்ற அடிப்படையில் மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு, 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தத் திட்டத்தில் கடந்த ஜூலை மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்ட 7,822 பணிகளின் மதிப்பு 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி மதிப்பிலான 7,649 பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு திட்டங்களின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 66 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 4,085 திட்டங்கள் தற்போது வரை நிறைவு பெற்றுள்ளது.

நிறைவு பெற்ற திட்டங்களில் இந்தியாவில் பல நகரங்களில் பல் அடுக்கு வாகன நிறுத்தங்கள், நடந்து செல்லும் வகையில் சாலைகள், எல்இடி விளக்குகள் என்று நகர்புற மக்களுக்கு தேவையான பல அடிப்படை திட்டங்கள் என்பது மிகவும் முக்கியமானவை.



இதற்கு அடுத்த படியாக முக்கியமான நகர்புற வளர்ச்சி திட்டம் என்றால், அது மெட்ரோ ரயில் திட்டம்தான். இந்தியாவில் முதல் மெட்ரோ ரயில் திட்டம் டெல்லி, பெங்களூரு, கெல்கத்தாவில்தான் முதலில் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 548 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டில் உள்ள மட்டுமல்லாமல் சென்னை, பெங்களுரூ, ஹைதாராபாத், கொச்சி, லக்னோ, நொய்டா, மும்பை, அகமதாபாத், நாக்பூர், கான்பூர், புனே, கொல்கத்தா , இந்தூர், அக்ரா, ஜம்மு என்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரும் இந்த பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு பெரிதும் பயன் உள்ள பொது போக்குவரத்தாக மாறி வருகிறது.

ஒரு நாட்டில் நாட்டில் நகர்புறங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டை பொறுத்துதான் அந்த நகரத்தின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட பல நகர்புற வளர்ச்சி திட்டங்களால் இந்தியாவின் பல நகரங்கள் தற்போது உலக அளவு முக்கியத்துவம் பெற்ற நகரங்களாக மாறி வருகிறது என்றால், அது மிகையல்ல.

வீடியோவைக் காண

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE