சண்டிகர்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடைபெறவிருந்த தீவிரவாதசதித் திட்டத்தை பஞ்சாப் மற்றும் டெல்லி போலீஸார் முறியடித்துள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறியது: சுதந்திரதினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ளமாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லிபோலீசார் உதவியுடன் கனடாவைச் சேர்ந்த ஆர்ஷ் டல்லா அமைப்பைச் சேர்ந்த 4 பேரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குர்ஜந்த்சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன், தீவிரவாத சதி செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து பி-86 வகையைச் சேர்ந்த 3 கையெறி குண்டுகள், ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு, இரண்டு 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கூடிய40 குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago