ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முழுவதும் தேசிய கொடி பறக்கிறது என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் திரளான மக்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு லலித் காட் பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா வரை நடந்து சென்றனர். முன்னதாக ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசியதாவது:
கடந்த 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி எழுச்சிமிகு உரையாற்றினார். அவரது உரையால் நாடு முழுவதும் தேசப்பற்று பொங்கி எழுந்தது. தேசத்தந்தை, நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர்ந்து நகரில் பேரணி நடத்துகிறோம். இப்போது 75-வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழாவை கொண்டாடுகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் 100-வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடுவார்கள்.
காஷ்மீர் வீடுகளில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக கூறப்படுவது கடந்த கால வரலாறு. இப்போது ஜம்மு காஷ்மீர் முழுவதும் வீடுகள்தோறும் தேசியக் கொடி பறக்கிறது. காஷ்மீர் மக்கள் தேசப்பற்றுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றனர். புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. வரும் 2047-ம் ஆண்டில் ஒளிமயமான காஷ்மீர் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாபேசும்போது, "தீவிரவாதத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். சிலர் தங்களது சுயலாபத்துக்காக தீவிரவாதத்தை தூண்டி வருகின்றனர். இதை அனுமதிக்க மாட்டோம். அடுத்த ஓராண்டில் காஷ்மீரில் இருந்து தீவிரவாதம் முழுமையாக வேரறுக்கப்படும். புதிய தலைமுறை காஷ்மீர் இளைஞர்கள் வளமான வாழ்க்கையை தொடங்குவார்கள்" என்று தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்பு: ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பங்கேற்கிறார். இதையொட்டி அந்த பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago