ஆர்எஸ்எஸ் சமூக வலைதள பக்கங்களின் முகப்பில் தேசியக் கொடி

By செய்திப்பிரிவு

நாக்பூர்: ஆர்எஸ்எஸ் சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் பக்க புகைப்படத்தில் தேசியக் கொடி வைக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளில் தனது அமைப்புக் கொடியை முகப்பில் வைத்திருந்த நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக் கொடி படத்தை வைத்துள்ளது.

நாடு 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வேளையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களின் முகப்புப்படத்தில் தேசியக் கொடியை வைக்குமாறு வேண்டினார். மேலும், வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் அரசியல் கொள்கை தலைமையகமான ஆர்எஸ்எஸ் தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் தேசியக் கொடியை முகப்புப் பக்கமாக மாற்றியுள்ளது.

முன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவரை நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அமைப்புக் கொடியை மட்டுமே ஏற்றிய ஆர்எஸ்எஸ் இம்முறை பிரதமர் கோரிக்கையை ஏற்று தனது சமூக ஊடக முகப்புப் படத்தில் தேசியக் கொடியை ஏற்றுமா என்று கேள்வியை எழுப்பியிருந்தார். இந்நிலையில் தான் முகப்பில் படத்தை மாற்றியுள்ளது ஆர்எஸ்எஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்