புதுடெல்லி: இந்திய விவசாயிகளுக்கு தேவை மனிதநேயத்துடன் கூடிய நிதியுதவியே தவிர, இரக்கமின்றி வழங்கப்படும் நிதியுதவி அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்துள்ளார்.
ஊரக கூட்டுறவு வங்கிகளின் மாநாட்டில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
விவசாயிகளுக்கு மனிதாபிமானத்துடன் கூடிய கடனுதவிகளை முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) வழங்கி வருகின்றன. இவற்றின் கடனுதவி மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை சென்று சேர வேண்டும். கூட்டுறவு மூலமாக வழங்கப்படும் வேளாண் கடனை ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பதற்கு நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பிஏசிஎஸ்-க்களை உருவாக்க வேண்டியது அவசியம்.
இதற்கு, மாநில கூட்டுறவு வங்கிகள் (எஸ்சிபி-கள்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் (டிசிசிபி-கள்) அதிகாரிகள் ஐந்து ஆண்டு இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ற வகையில் பணியாற்ற வேண்டும். இந்தியாவில் தற் போது 95,000-க்கும் அதிகமானபிஏசிஎஸ்-கள் உள்ளன என்றாலும் அதில் 63,000 தான் செயல்பாட்டில் உள்ளன. இவை ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளன. இரக்கமற்ற செயல்பாடுகளை மறந்து மனிதநேயத்துடன்செயல்படுவதால் பிஏசிஎஸ்-கள் வேளாண் கடன் அமைப்பின்ஆன்மாவாக உள்ளது. எனவே இவற்றை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
பிஏசிஎஸ்-களின் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டும் நிலையில், ரூ.10 லட்சம் கோடி வேளாண் கடன் அளிப்பை எட்டுவது என்பது சாத்தியமான நிகழ்வுதான்.
பிஏசிஎஸ்-களுக்கான மாதிரி விதிகளை உருவாக்குவது தொடர்பாக ஏற்கெனவே மாநில அரசுகளிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago