‘கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைக் கடந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் தாக்கி அழித்த வீடியோ காட்சிகளை, பொறுத்திருந்து பாருங்கள்’ என, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ம் ஆண்டு விழாவையொட்டி, டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஏராள மான பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது,
‘தூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களிடம் மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில், ஒரு சமூக பிரச்சினைக்கு இந்தளவுக்கு மக்கள் ஒன்றாக இணைந்து செயல் பட்டதில்லை. தூய்மை இந்தியா திட்டம் வெறுமனே விழிப்புணர்வு பிரச்சாரமாக மட்டுமல்லாமல், நாட்டின் மிக முக்கிய சமூக இயக்கமாக மாறியுள்ளது’ என்றார்.
பின்னர், ‘ஸ்மார்ட் டாய்லட்’ கழிப்பறைகளைத் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘கட்டுப் பாட்டு எல்லைக்கோட்டை கடந்து தீவிரவாதிகளை தாக்கி அழித்த இந்திய ராணுவத்தின் துணிச்சல் உலக அரங்கில் நம்மை பெருமைகொள்ளச் செய்திருக்கிறது’ என்றார்.
‘இந்த தாக்குதல் நடவடிக்கையின் நம்பகத் தன்மை குறித்து பாகிஸ்தான் தரப்பில் சந்தேகம் எழுப்பியிருக்கும் நிலையில், இந்தியாவும் அதற்கான வீடியோ பதிவுகளை இன்னும் வெளியிடாதது ஏன்?’ செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘பொறுத் திருந்து பாருங்கள்’ என, ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago